இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்

வாழைப்பழம் விலை மலிவாக கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாக கருதப்படுகிறது. பொதுவாக நம்மில் சிலர் இரவில் சாப்பிட்டு முடித்த பின்பு ஒரு பழம் சாப்பிடுவது வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் நன்மை பற்றி அவர்களுக்கு தெரியாது. அதன் நன்மையை அறிந்து அனைவரும் சாப்பிட்டு பலனை பெறுவோம்.

வாழைப்பழ நன்மைகள்:-

  • வாழைப்பழத்தை இரவில் சாப்பிடுவதன் மூலம் தூக்கமின்மையை விரட்டலாம். மெலடோனை உற்பத்தி செய்து இரவில் நல்ல தூக்கத்தை தருகிறது.
  • இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு 4700 மில்லி கிராம் அளவிற்கு பொட்டாசியம் சேர்த்து கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
  • பல பேருக்கு இரவில் தூங்கும் முன் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். அவர்களுக்கு வாழைப்பழத்தை கொடுப்பதன் மூலம் இனிப்பு உணவுக்கு சிறந்த மாற்றாக செயல்படுகிறது.
  • இரவில் படுக்கும் போது வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் கை, கால்களில் உள்ள தசைப் பிடிப்பு குணமாகும்.
  • வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அது செரிமான மண்டலத்திற்கு நல்லது. இதனால் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.