நெஸ்ட்லே நிறுவனம் மேகியை திரும்பப் பெற்றது!

ஒவ்வொரு பேச்சலர் வாழ்க்கையிலும் மேகி கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இது விரைவில் சமைக்ககூடிய ஒரு உணவாகும். ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மேகியில் அதிக அளவு பாதரசம் கலந்து உள்ளதாக உணவு பொருள் ஆய்வு நிறுவனம் மேகியை தடைவிதித்தது.

நெஸ்ட்லே நிறுவனம் மேகியை திரும்பப் பெற்றது:-

சிறு நகரங்களில் உள்ள நூடுல்ஸ்களை ஆய்வு செய்ததில் 7 மடங்கு அதிகமாக ஈயம் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது. அதிகபட்ச அளவில் ஈயம் கலந்த உணவை சாப்பிடுவதால் இறப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

உணவுப் பொருளில் உள்ள பாதரசத்தை அவ்வளவு எளிதாக பிரித்தெடுக்க முடியாது என்பதால் மேகி நூடுல்ஸ் விற்பனையை நேப்பால் அரசு தடைவிதித்தது. இதனால் ரீடெய்ல் நிறுவனங்கள், வால் மார்ட் போன்ற சூப்பர் மார்க்கெட்டிலும் இதை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் மேகி நூடுல்ஸ்களுக்கு சிங்கப்பூரில் இடைக்காலத் தடை விதித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக மேகி நூடுல்ஸை நெஸ்ட்லே நிறுவனம் விற்று வந்தது. நெஸ்ட்லே நிறுவனத்தில் அதிகப்படியாக விற்பனையாகும் தயாரிப்பு மேகி நூடுல்ஸ் மட்டும் தான்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment