இயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை!

இயற்கையில் கிடைக்கும் அனைத்து வகையான பொருள்களுக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. ஆனால் அதன் பயன்கள் நமக்கு தெரியாமலே போய் விடுகிறது. இப்போது இயற்கையாக கிடைக்கக் கூடிய பொருள்களை அழகு சாதன பொருளாக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

இயற்கையாக கிடைக்கும் பொருள்களை அழகை அதிகரிக்கும் பொருளாக பயன்படுத்தும் முறை:-

  • தேங்காய் எண்ணெயை தலைமுடியில் தடவினால் வறட்சி நீங்கி தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். சருமத்தில் தடவுவதன் மூலம் சருமச் சுருக்கத்தை தடுக்கலாம்.
  • மருதானி இலையை அரைத்து நல்லெண்ணெய் மற்றும் கறிவேப்பிலையுடன் சேர்த்து தலைமுடியில் தடவினால் சிறந்த ஹேர் டை போன்று செயல்பட்டு நரைமுடியை கருப்பாக மாற்றுகிறது . இந்த முறையை செய்வதன் மூலம் எந்த விதமான பக்கவிளைவும் ஏற்படாது.
  • தயிருடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் மாஸ்காக பயன்படுத்தினால் கரும்புள்ளிகள் நீங்கும். பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவுவதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சியான சருமம் கிடைக்கும்.
  • பூண்டை அரைத்து முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் உடனடியாக மறையும். அல்லது அதன் தோலை நீக்கிய பின்னர் அதை பருக்களின் மீது தடவினால் பருக்கள் மறையும்.
  • தயிருடன் சந்தனப் பொடி, மஞ்சள் பொடி, சர்க்கரை அனைத்தையும் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவினால் முகத்தை சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்ளலாம்.
  • மாதுளை பழத்தை அரைத்து பாலுடன் சேர்த்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் உதடு சிகப்பாகவும், அழகாகவும் தோற்றமளிக்கும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.