முதுகுவலியா? கவலை வேண்டாம் சூரிய குளியல் எடுங்கள் சரியாகிவிடும்!

நம்மில் பலபேருக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முதுகுவலி. சிறியவராயினும் பெரியவராயினும் முதுகுவலி பாரபட்சம் பார்ப்பது இல்லை வாட்டி வதைத்துவிடும். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும், நீண்ட நேரம் சேரில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்பவரானாலும் சரி முகுது வலிக்கு தப்ப முடியாது.அதுமட்டும் அல்லாமல் ஏ.சி ரூமே கதி என்று இருப்பவர்களுக்கும், மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும், முதுகு வலி வர வாய்ப்பு நிறைய உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

மசாஜ் செய்வதின் மூலம் முதுகு வலியை குறைக்க இயலும் என்பது நிபுணர்கள் கருத்து. மசாஜ் செய்வதற்கு வெள்ளைபூண்டு எண்ணெய் பயன்படுத்தினால் நல்லது. ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் சுடு தண்ணிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை காணலாம்.

நமது உடலில் உள்ள பற்களும் எலும்புகளும் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் டி தேவை. ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு வைட்டமின் டி ஆனது சுமார் 1000 யூனிட் அளவில் இருந்து சுமார் 2000 யூனிட் அளவு தேவை என வல்லுநர்கள் கருத்து.வைட்டமின் டி சத்து குறைவாக இருந்தாலும் முதுகு வலி வர வாய்ப்பு உள்ளது.

அப்படியானால் முதுகு வலி வராமல் தடுக்க வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்.கிரைகள் ராகி போன்ற உணவுகளில் அதிகமான வைட்டமின் டி சத்து உள்ளது. இவற்றை உட்கொண்டால் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்து விடும்.

ஆனால் இயற்கையாக நமக்கு நமது சூரியன் வைட்டமின் டி சத்தை கொடுக்கிறது.செடி, கொடி, மரங்களின் மூலாதாரமே சூரிய ஒளி தான். அவற்றை எவ்வாறு பெறுவது என்ற எண்ணம் தோன்றும்.மிக எளிய வழி வெளிநாடுகளில் சூரியகுளியல் என்ற பெயரில் கடற்கரை ஒரத்தில் சூரிய ஒளி உடலில் படுமாறு இருப்பார்கள்.

அவ்வாறு செய்யும் போது நமது உடலானது சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி சத்தை கிரகித்துக்கொள்ளும். ஆனால் நம்ம ஊரில் சூரிய ஒளியை பற்றி கண்டுகொள்வதே இல்லை. இதனால் தான் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றோம்.

படாத பாடு படுத்தும் முதுகு வலியிலிருந்து தப்பிக்க காலை மாலை இருவேளையும் சூரிய குளியல் எடுத்தால் போதுமானது. என்பது வல்லுநர்களின் கருத்து.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.