இஞ்சியில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா?

இஞ்சியை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. இதன் சுவை ஒரு சிலருக்கு பிடிக்காது. எனவே, இதை உணவில் சேர்க்கமாட்டார்கள். ஆனால் அதற்கு மாறாக இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கி உள்ளன. இஞ்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

இஞ்சியில் உள்ள மருத்துவ குணம்:-

  • வயதானவர்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை போன்றவை இஞ்சி துண்டுகளை மென்று சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம்.
  • இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்த சாற்றினை கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.
  • இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி, மற்றும் பூண்டுச்சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் நிரந்தர தீர்வு பெறலாம்.
  • இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் பசியை தூண்டுவதோடு இரைப்பைக்கு பலம் சேர்க்கிறது.
  • இஞ்சியை நீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் தலைவலி வராமல் தடுக்க முடியும்.
  • இஞ்சியை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள தேவையற்ற நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்யும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.