எளிதில் கிடைக்க கூடிய பூக்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

பூக்கள் என்றாலே அழகுக்கு பயன்படுத்தலாம் அல்லது தலையில் வைக்கலாம் என நினைப்போம். ஆனால் அவை அதிக அளவிலான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எளிதில் கிடைக்க கூடிய சில குறிப்பிட்ட பூக்களின் மருத்துவ குணங்களை இப்போது பார்க்கலாம்.

பூக்களின் மருத்துவ குணங்கள்:-

  • செம்பருத்தி பூக்களை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின்னர் காலை, மாலை என இரு வேளைகளிலும் குடித்து வந்தால் இதயம் பலவீனமானவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
  • பசும் பாலில் ரோஜா பூவின் இதழ்களை போட்டு குடித்து வந்தால் நெஞ்சு சளி மற்றும் இரத்த சோகை பிரச்சனை சரியாகும்.
  • மல்லிகை பூவை கண்களில் சிறிது நேரம் வைத்து கட்டினால் கண் பார்வை குறைபாடு ஏற்படாது. மிகச் சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது.
  • கர்ப்பிணி பெண்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் பிறக்கும் குழந்தை அழகானதாகவும், ஆரோக்கியமானதாகவும் பிறக்கும்.
  • வேப்பம் பூ சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு பூச்சிகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பூவிற்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மையும் உண்டு.
  • வாழைப் பூவை உணவில் சேர்த்து வருவதன் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராவதுடன் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.