தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா?

பொதுவாக தேன் பல்வேறு பூக்களிலிருந்து சேகரிக்கப்படுவதால் அந்த பூவில் உள்ள மருத்துவ குணம் தேனுக்கு கிடைக்கிறது. தேனில் அதிகப்படியான ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதை சாப்பிடுவதால் பல வியாதிகளை விரட்டலாம். இதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

தேனில் உள்ள மருத்துவ குணம் பற்றி தெரியுமா:-

  • தேனுடன் நீர் மற்றும் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து கிடைக்கும் நீரை குடித்து வந்தால் மூட்டுவலி குணமாகும்.
  • ஆரஞ்சு சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன் பாலில் சிறிதளவு தேன் கலந்து குடித்தால் சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். மேலும் இரவு நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
  • அரிசி மாவு, தேன், ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பசையாக்கி பாதங்களில் 15 நிமிடம் ஊறிய பின்பு கழுவினால் வெடிப்பு மாறும்.
  • மிளகு பொடி, தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை இதமான நீரில் கலந்து தினமும் இருமுறை குடித்தால் போதும், சைனஸ் பிரச்சனையை முழுவதுமாக விரட்டலாம்.
  • அன்னாசி பழச்சாறுடன் தேன் கலந்து ஒரு மாத காலத்திற்கு சாப்பிட்டால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்கள் வராது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.