இறைச்சியை அதிக அளவில் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

இறைச்சியை ஒரு சிலர் விரும்புவதில்லை. அதற்கு மாறாக ஒரு சிலர் எந்த நேரத்திலும் இறைச்சியை சாப்பிட நினைப்பார்கள். பொதுவாக இறைச்சியை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான கலோரி மற்றும் புரோட்டீன் அதிக அளவில் கிடைக்கும் என நாம் அறிந்த ஒன்று தான். மேலும் இறைச்சி சாப்பிடுவதால் திசுக்கள் வளர்ச்சி அடைவதோடு வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.

இறைச்சியை அதிக அளவில் சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள்:-

ஒருவர்  சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன் கடைசியாகவே ஜீரணிக்கிறது. முதலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை ஜீரணித்த பின் தான் புரோட்டீன் ஜீரணமாகும். ஆனால் இறைச்சியில் உள்ள புரோட்டீன் உடலில் தங்கி கொழுப்பாக மாற்றப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகமாகிறது.

தொடர்ந்து எட்டு வாரங்கள் அதிக புரோட்டீன் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. மேலும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரையினால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 50% உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடையை சீராக வைத்திருக்க நினைப்பவர்கள் கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற உணவுகளினை போல புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.