மாருதி சுஸூகி இக்னிஸ் அறிமுகம்

சுஸூகி நிறுவனத்தால் பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாருதி சுஸூகி இக்னிஸ் கார் எளிதாக உபயோகிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிதுவமான டிசைன் அம்சங்களையும், பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

எஞ்ஜினை பொருத்த வகையில் 88 பிஹெஸ்பி திறனையும் 120 என்எம் டார்க்கையும் வழங்கும் 4 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் டியூவல்ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் இரு வடிவங்களில் கிடைகிறது. சுஸூகியின் எஸ்ஹெஸ்விஎஸ் எனப்படும் ஸ்மார்ட் ஹைப்ரிட் வெஹிகிள் சிஸ்டம் தொழில்நுட்பம் கொண்டுள்ள ஒரு வடிவமாகவும், எஸ்ஹெஸ்விஎஸ் இல்லாத தொழில்நுட்பம் கொண்டுள்ள எஞ்சின் என இரு வடிவங்களில் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ் பொறுத்த வகையில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. டிரான்ஸ்மிஷன் பொறுத்த வகையில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனாக உள்ளது.

இந்த காரின் சிறந்த அம்சங்களாக சிறந்த டிரான்ஸ்மிஷன், ஆடியோ மற்றும் நேவிகேஷன் வசதிகள், புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சஸ்பென்ஷன்கள், சிறந்த பாதுகாப்பு வசதிகள் எல்இடி ஹெட்லேம்புகள் ஆகியவை உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.