மாருதி செலிரியோ அறிமுகம்

மாருதி நிறுவனத்தின் மாருதி செலிரியோ பல்வேறு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் ஏர் பிரேக், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

எஞ்ஜினை பொருத்த வகையில் 67 பிஹெஸ்பி திறனையும் 90 என்எம் டார்க்கையும் வழங்கும் 3 சிலிண்டர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் 23.1 கி.மீ/லி ஆக உள்ளது. கியர்பாக்ஸ் பொறுத்த வகையில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மேலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கும், 235 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமையும் இந்த மாருதி செலிரியோ கொண்டுள்ளது. டிரான்ஸ்மிஷன் பொறுத்த வகையில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷனாக உள்ளது.

இந்த காரின் சிறந்த அம்சங்களாக சிறந்த டிரான்ஸ்மிஷன், ஹெட்ரூம், அதிக மைலேஜ், பாதுகாப்பு வசதிகள், எஞ்சின், குறைந்த விலை ஆகியவை உள்ளது.

மாருதி நிறுவனத்தின் சர்வீஸ் நெட்வொர்க் இந்திய முழுவதும் பரந்துவிரிந்துள்ளதால் எளிதில் சர்வீஸ் செய்து கொள்ள முடியும். இந்த காரின் விலை சந்தையில் ரூ 4.43 லட்சமாக உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment