மகா சிவராத்திரியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!

வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்து கொண்டு  இருந்தாலும் மகா சிவராத்திரி விரதம் என்பது எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பான ஒன்று தான். மாசி மாத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே “மகா சிவராத்திரி” என அழைக்கிறோம். இந்த நாளின் மூன்றாவது காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் எவ்வளவு பெரிய பாவங்கள் செய்து இருந்தாலும் அது நம்மை விட்டு விலகிப் போய்விடும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இப்போது பார்க்கலாம்.

செய்யக் கூடியவை:-

சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் அருகில் உள்ள சிவனின் ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜை செய்ய வேண்டிய இடத்தை சுத்தம் செய்து மாலை மற்றும் தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் பூஜையில் பூஜைக்கு தேவைப்படக் கூடிய இளநீர், சந்தனம் போன்ற நம்மால் முடியக் கூடிய பொருள்களை வாங்கி கொடுக்கலாம்.

ஒரு சிலர் வீட்டிலேயே நான்கு கால பூஜையையும் செய்வர். வீட்டில் சிவனுக்கு பூஜை செய்ய முடியாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொண்டால் கூட போதும். பின்னர் இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம் கோயில்களில் நடைபெற்றால் அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், முதலானவற்றை படிக்கலாம், அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி நம் காதால் கேட்கலாம், அல்லது அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானம் செய்யலாம்.

சிவராத்திரியில் செய்யக்கூடாதவை:-

முக்கியமாக சொல்ல வேண்டுமானால் பகலில் தூங்கக் கூடாது. சிவராத்திரி அன்று முழுவதும் கண் விழித்தே இருக்க வேண்டும். அதற்காக போனில் விளையாடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ கூடாது.

சிவராத்திரியில் உடலாலும் சரி மனதாலும் சரி சிவனின் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அதற்காக தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதையும் பார்க்க கூடாது. முழுவதுமாக சிவ பெருமானின் நினைவிலேயே இருக்க வேண்டும்.

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment