விலை குறைவான பிஎம்டபுள்யூ இந்தியா வர வாய்ப்பு

விலை குறைவான பிஎம்டபுள்யூ;

பொதுவாக கார் என்று எடுத்துக் கொண்டாலே பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற கருத்து உள்ளது. அதிலும் சில சொகுசு கார்கள் சந்தையில் உள்ளன. அந்த காரினை பரம்பரை பணக்காரன் மட்டுமே வைத்து இருப்பான் என்று நினைப்பார்கள். சொகுசு கார்களில் பிஎம்டபுள்யூ வாகனத்துக்கு சிறப்பான இடம் உண்டு. இது விலை மிகவும் அதிகம்.

சமீபத்தில் நடந்த சீன கண்காட்சியில் பார்வைக்காக விடப்பட்ட  காரானது அந்த நாட்டின் சந்தையில் பயன்படுத்துமாறு உருவாக்கப்பட்டு விலை குறைவானதாக வெளியிடப்படுவதாக இருக்கிறது.

அந்த கார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இந்தியாவிலும் விலை குறைவான காரை விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளி வந்து உள்ளது.

பல சிறப்பம்சம் கொண்ட இந்த காரானது 6 ஸ்பீடு கியர் மனிதனால் இயக்க கூடியதாகவும், 8 ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆட்டோமேடிக்காகவும் வர இருக்கிறது.

இதன் விலை பெரும்பாலும் இந்திய மதிப்பின் படி 30 லட்சம் முதல் 35 லட்சம் வரை கொண்டதாக இருக்கும். இந்தியாவிலும் விரைவில் வர வாய்ப்பு இருக்கிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment