கண்ணாடி அணிந்திருந்தாலும் அழகாக தோன்ற என்ன செய்யலாம்?

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி கண்ணாடி அணிந்தால் அவர்களின் அழகு பாதிக்கப்படும். இதற்காகவே பெரும்பாலானோர் காண்டக்ட் லென்ஸை பயன்படுத்துகிறார்கள். காண்டக்ட் லென்ஸ் அணிவதால் சில தீமைகளும் ஏற்படும் எனவே அதை தூக்கி எறிந்து விட்டு கண்ணாடி அணிவது நலம். பெண்கள் கண்ணாடி அணிந்தாலும் அழகாக தோற்றமளிக்க செய்யும் வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

  • கண்ணாடியை அணியுபவர்களாக இருந்தால் நீங்கள் உங்கள் புருவத்தை சீர் செய்து கொள்ள வேண்டும். இதற்கெனவே நிறைய பார்லர்கள் அங்காங்கே அமைந்துள்ளது.
  • உங்கள் லென்ஸிற்கு ஏற்ற நல்ல பிரேமை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இதில் அழுக்கு ஏற்படாமல் இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்.
  • கண்ணில் உள்ள இமை முடிகளை சுருட்டி விட வேண்டும். பின்பு ஐ-ஷேடோ பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • கண்களுக்கு ஐ – லைனரை பயன்படுத்தலாம். பூனை வடிவம் அல்லது இறக்கை வடிவம் இதில் எது உங்கள் கண்ணுக்கு சிறப்பாக பொருந்துகிறதோ அதையே பயன்படுத்த வேண்டும்.
  • உங்களை அழகாக காட்ட சிவப்பு அல்லது பிங்க் நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும். இதனால் உங்களை சுலபமாக அழகாக காட்டலாம்.
  • மேற்கண்ட அனைத்தையும் கடைபிடித்தாலும் அதிக அளவிலான தண்ணீர் குடித்து வந்தால் சருமத்திற்கு மிகவும் நல்லது.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.