அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்!!

பெண்கள் எல்லோரும் தங்களுக்கு நீளமான கூந்தல் வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் நீளமான கூந்தலை பெற்றிருப்பவர்களின் பராமரிக்கும் நேர அளவு அதிகமாவதுடன் அதிக அளவு மெனக்கெட வேண்டி இருக்கும். நீளமான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற்றவர்கள் தினசரி சந்திக்கும் சில பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம்.

  • அதிக அளவிலான தலைமுடியை பெற்றிருப்பதால் எலாஸ்டிக் இரப்பர் அல்லது சடைமாட்டி அறுந்து போகும் வாய்ப்புள்ளது.
  • அதிக அடர்த்தியுள்ள கூந்தலை எப்போதும் தலை சுமப்பதால் தலைவலி அடிக்கடி வர வாய்ப்புண்டு. முன் பக்கமாக உள்ள முடி நமது வாய்ப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. இதனால் தொந்தரவு ஏற்படும்.
  • காலையில் தலைக்கு குளித்தால் தலைமுடியில் உள்ள ஈரம் அவ்வளவு எளிதில் காயாது. மேலும் தலைமுடியில் உள்ள சிக்கலை எடுப்பதற்குள்ளாக போதும் போதும் என்று மாறிவிடும்.

பராமரிக்கும் முறை:-

அடர்த்தியான தலைமுடி இருந்தால் முடியை முறையான அளவில் வெட்டி சரி செய்து கொள்ள வேண்டும். அதிக அளவில் இருந்தால் ஸ்டைலான அடுக்குகளாக மாற்றி கொள்ளலாம். உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு உங்கள் தலையை வாறுவது நல்லது. தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புவை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தலைமுடியை ஸ்ட்ரெயிட்டனிங் அல்லது சடை போட்டு பின்னி கொள்ளுதல் நல்லது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.