குளிக்கும் போது இதை செய்தால் முடியை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்!!

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் ஷவர் கண்டிப்பாக இருக்கும். வாளியில் உள்ள நீரை எடுத்து குளிப்பதற்கு கூட சோம்பேறித்தனப்பட்டு ஷவரில் குளிப்பார்கள். ஆனால் தினமும் குளிக்கும் போது தலைமுடிக்கு பல பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க உதவும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

குளிக்கும் போது இதை செய்தால் முடியை ஆரோக்கியமாக் வைத்து கொள்ளலாம்:-

  • ஒரு சிலர் தலைமுடியின் நீளத்திற்கு ஏற்றவாறு ஷாம்பு தேய்ப்பார்கள். உண்மையில் தலைமுடியின் அடியில் மட்டுமே அழுக்கு இருக்கும். இதை கருத்தில் கொண்டு ஷாம்பு பயன்படுத்தினாலே போதும். அதிக அளவிலான ஷாம்பு தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
  • வெந்நீரை சருமத்திற்கோ அல்லது தலைமுடிக்கோ பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் சருமம் மற்றும் முடியானது அதிக அளவில் வறட்சி அடையக் கூடும்.
  • வேலைக்கு செல்லும் போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ அவசர அவசரமாக தலையை சீவி விட்டு செல்வதால் முடியில் அங்காங்கே வெடிப்புகள் ஏற்படும்.
  • ஷவரில் குளிப்பது சுகமானது தான் என்றாலும் அதில் நீண்ட நேரம் குளித்தால் தலைமுடிக்கு ஆபத்து என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஷவரில் 10 நிமிடத்திற்கு மேல் கண்டிப்பாக குளிக்க கூடாது.
  • தலைமுடியில் கண்டீசனரை பயன்படுத்தி தலைக்கு குளிப்பதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், ஆலிவ், நல்லெண்ணெய் போன்றவற்றை தலைக்கு பயன்படுத்தி பின்னர் குளித்தால் முடி ஆரோக்கியமாக வளரும்.
  • ஈரமான தலைமுடியை காய வைப்பதற்கு துணியால் துடைப்பார்கள். அப்படி செய்வதால் தலைமுடியின் முனையில் வெடிப்புகள் ஏற்படும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment