வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி கருவளையத்தை நீக்கும் முறை!

டீன் ஏஜ் வயதினர் மற்றும் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது இந்த கருவளையம் தான். இது அதிகமான நேரம் மொபைல் அல்லது கணிப்பொறி பார்ப்பதால் ஏற்படுகிறது. இதை வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தியே எளிதில் குணமாக்கலாம்.

வீட்டில் உள்ள பொருள்களை பயன்படுத்தி கருவளையத்தை நீக்கும் முறை:-

  • கருவளையத்தை சரி செய்ய அதிக அளவிலான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும். எடுத்துக்காட்டாக முளைகட்டிய பயிர், பதப்படுத்தப்பட்ட தானியங்கள், கொழுப்பு அகற்றிய பால், பாலடைக் கட்டி, பீன்ஸ் போன்றவை.
  • கண்களில் ஏற்படும் சோர்வை குறைப்பதற்கு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவினாலே போதும். கண்களில் ஏற்படும் கருவளையம் காணாமல் போய் விடும்.
  • வெள்ளரியின் சாற்றினை கண்களை சுற்றீ உள்ள பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து கண்களை கழுவினால் கருவளையம் மறையும்.
  • உருளைக் கிழங்கின் சாறு மற்றும் வெள்ளரியின் சாற்றினை ஒன்றாக கலந்து கண்ணை சுற்றியுள்ள பகுதிகளில் தடவி வந்தால் கருவளையம் மறையும்.
  • எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரி சாற்றினை கருவளையத்தின் மீது தடவினால் கருவளையம் மறையும். தேயிலை தூளின் பையினை கண்களில் வீக்கம் ஏற்படும் பகுதிகளில் வைத்து வந்தால் வீக்கம் மற்றும் கருவளையம் மறையும்.
  • புதினா இலையின் சாற்றினை கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் மறையும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.