தினமும் கரும்பு சாறு குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கரும்பு பொங்கல் சமயத்தில் தான் நாம் அனைவரும் சாப்பிடுவோம். ஆனால் இது வெயில் காலத்திலும் கூட கிடைக்கிறது. பெரும்பாலான சாலை ஒரங்களில் கரும்பு சாறு விற்கப்படுகிறது. தினமும் கரும்பு சாறை குடித்தால் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன. அதை இப்போது பார்க்கலாம்.

கரும்பு சாறின் நன்மைகள்:-

  • கரும்பு சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.
  • இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்று புண்களை சரி செய்யும். மலச்சிக்கலை சரிசெய்கிறது.
  • கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
  • கரும்பு சாறுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்யலாம்.
  • உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
  • மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
  • கரும்பை நசுக்கி புண் இருக்கும் இடங்களில் கட்டி வைப்பதன் மூலம் விரைவில் குணமாக்கலாம்.
  • நாட்டு சர்க்கரை, தேன் மெழுகு சேர்த்து காய்ச்சி முகப்பருவின் மீது தடவுவதன் மூலம் பருக்களை விரைவில் மறைக்கலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.