கண்ணில் உள்ள கருவளையம் மறைய என்ன செய்யலாம்?

இரவில் சரியாக தூங்காமல் இருக்கும் போது மொபைல் போன் பார்த்தல், துக்கத்தின் காரணமாகவும் கருவளையம் உருவாகிறது. அப்படி ஏற்படும் கண்ணில் உள்ள  கருவளையத்தை அவ்வளவு சீக்கிரமாக மறைக்க முடியாது. என பலரும் கூறுவார்கள். அதை மறைக்க சில எளிய வழிகள் உள்ளன. அதை இப்போது பார்க்கலாம்.

வழிமுறைகள்:-

  • விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
  • இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும்.
  • விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும்.

கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment