ஹூண்டாய் ஐ 10 அறிமுகம்

ஹூண்டாய் நிறுவனத்தின் பட்ஜெட் கார் மாடலாக இந்த ஹூண்டாய் ஐ 10 கார் உள்ளது. பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் சிறந்த பாதுகாப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

எஞ்ஜினை பொருத்த வகையில் 68 பிஹெஸ்பி திறனையும் 99 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜ் 19.81 கி.மீ/லி ஆக உள்ளது. கியர்பாக்ஸ் பொறுத்த வகையில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டது. மேலும் 225 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூமையும் இந்த ஹூண்டாய் ஐ 10 கொண்டுள்ளது.

இந்த காரின் சிறந்த அம்சங்களாக சிறந்த டிரான்ஸ்மிஷன், அதிக மைலேஜ், சிறந்த பாதுகாப்பு வசதிகள், எஞ்சின், குறைந்த விலை,பிராண்ட் மதிப்பு ஆகியவை உள்ளது.

ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்கும் இந்த ஹூண்டாய் ஐ 10 கார் எல்பிஜி & பெட்ரோல் என இரு மாடல்களிலும் கிடைகிறது. இந்த காரின் விலை சந்தையில் ரூ 4.68 லட்சமாக உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment