இளமையுடன் இருக்க வேண்டுமா? இந்த உணவுகளை பின்பற்றுங்கள்!!

இளமையுடன் இருக்க வேண்டும் என்று எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அப்படி இருப்பது மிகவும் கஷ்டம்.ஆனால் நம் முன்னோர்கள் நீண்ட காலம் இளமையுடன் இருந்தார்கள்.இதற்கு காரணம் என்னெவென்றால் அவர்கள் மேற்கொண்ட வாழ்க்கை முறையும் உணவுப்பழக்கங்களும் ஆகும். ஆனால் இப்போது உள்ள நாகரிக உணவு முறையால் வேகமாக நாம் ஆரோக்கியத்தை இழந்து சிறிய வயதிலே பல நோய்களுக்கு உள்ளாக வேண்டியதாகிறது. இதன் நாள் வெகு நாட்கள் இளமையாக இருக்க முடிவதில்லை. இவை எல்லாத்திற்க்கும் காரணம் நாம் சாப்பிடுகிற உணவு பழக்கங்கள் தான்.

நாம் இளமையாக இருக்க வேண்டும் என்று பல வகையான அழகுச் சாதனங்களை உபயோகப்படுத்துகிறோம். இதன் விளைவாக சருமத்தில் விரைவாக சுருக்கங்கள் ஏற்ப்பட்டு வயதான தோற்றத்தை தருகின்றன. சுருக்கத்தை போக்கி அழகாக தோன்ற அறுவை சிகிச்சை கூட செய்கிறார்கள். இது போன்று சுருக்கங்கள் வராமல் இளமையோடு இருப்பதற்கு என்னென்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை கீழே காண்போம்.!!!!!

  • நட்ஸ்:

நட்ஸில் வைட்டமிங்கள் மற்றும் மோனோ-அன்சாச்சுரேட்டட்ஃபேட்டி ஆசிட் நிறைய இருக்கின்றன.மேலும் இதில் சத்துக்கள் அளவுக்கும் அதிகமாக நிறைந்துள்ளன. சருமத்தில் இருக்கும் பழுது அடைந்த செல்களை புதுபிக்க நட்ஸ்சை உண்டால் சரிசெய்யலாம்.இது சருமத்துக்கு வறட்சி ஏற்படாமல் ஈரப்பதத்துடன் இருக்க வைத்து இளமையோடு இருக்க வழி செய்கிறது. பாதாம், முந்திரி, வால்நட் ஆகியவற்றை உண்பது மிகவும் சிறந்தது.

  • பெர்ரி:

பெர்ரிப் பழத்தில் அளவுக்கு அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது. இதனை தினந்தோறும் உண்ணும் போது சருமம் அழகாக இருக்கும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

 

பச்சை இலை காய்கறிகள்:

பச்சை இலை காய்கறிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பொருளும் நிறைய இருக்கிறது. அது மட்டுமால்லாமல் இதில் வைட்டமின் சி,இ,பி12 ஆகியவையும் உள்ளது. இவை இரத்தத்தை சுத்தம் செய்கிறது மற்றும் சருமத்தில் இருக்கும் பழுது அடைந்த செல்களை சீக்கிரமாக குணமடையச் செய்கிறது.ஆகவே பீன்ஸ்,பீட்ருட்,பசலைக்கீரை,ப்ராக்கோலி ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

மீன்:

மீனில் ஒமேகா 3 சத்து மிகுதியாக உள்ளது. மீன் அடிக்கடி சாப்பிடுவதால் சருமம் பொலிவோடு இருக்கும் மற்றும் கூந்தல் நன்கு வளரும். உடலுக்கு தேவையான எண்ணெய் மீனில் இருக்கிறது.

கோதுமை:

கோதுமையில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்து,புரோட்டீன்கள் நிறைய இருக்கிறது. இதில் நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சீராக இயங்குகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment