பல் வலியை உடனடியாக குணப்படுத்த என்ன செய்யலாம்?

நாம் சிறுவர்களாக இருக்கும் போது செய்யும் பெரிய தவறு அதிகமான இனிப்புகளை சாப்பிடுவது மட்டும் தான். இது நாளடைவில் பற்களை சரியாக பராமரிக்காமல் இருக்கும் போது பல் சொத்தை, ஈறுகளீல் வீக்கம் உண்டாகி பல் வலியை ஏற்படுத்தும்.

ஈறுகள் பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதை அதன் நிறத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். அடர்ந்த ப்ரவுன் நிறத்தில் இருந்தால் ஆரோக்கியமானது, சிகப்பாக இருந்தால் அது பாதிப்படைந்து இருப்பதாக மருத்தௌவர்கள் கூறுகிறார்கள்.

வழிமுறை:

முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெ கிருமிகளை அழிக்கும்), சிறிதளவு கிராம்பு பொடி (இது வலியை மரத்து போக செய்யும்) சேர்த்து பேஸ்டு செய்ய வேண்டும். பின்பு மிதமான சூட்டில் உள்ள நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். பின்பு தயார் செய்த பேஸ்டை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரால் வாய் கழுவவும். இப்பொழுது பல்வலி நிச்சயமாக குறைந்து இருக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.