மகா சிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா?

மகா சிவராத்திரியின் வரலாறு:-

அம்பிகை தேவி சிவபெருமானை மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் வணங்கி அருளை பெற்ற காரணத்தாலே மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டன. இதன் ஆபத்தை மேலும் அதிகமாகமல் தடுக்க அம்பிகை இரவு முழுவதும் சிவபெருமானை நினைத்து பூஜை செய்தார். குறிப்பாக நான்கு காலங்களிலும் இரவு முழுவதும் சிவனுக்கு மலரால் அர்ச்சனை செய்து வந்தார்.

பூஜையின் முடிவில் தங்களை வணங்கி பூசித்த இந்த நாளின் இரவை தேவர்களும், மனிதர்களும் சிவராத்திரி என்று கொண்டாடும் படி வேண்டிக் கொண்டாள் அம்பிகை. அந்த வகையில் சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை யார் தங்களை பூஜை செய்தாலும் அவர்களுக்கு வாழ்வில் அனைத்து வகையான பாக்கியங்களையும் வழங்கி முடிவில் மோட்சத்தை அளிக்க வேண்டும் என்று அம்பிகை வேண்டிக் கொண்டார். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என அருள் வழங்கினார். அந்த இரவே சிவராத்திரி என அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment