ஹீரோ அச்சீவர் 150 விற்பனைக்கு அறிமுகம்

உலகின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் புதிய பைக் ஹீரோ அச்சீவர் 150 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்  ஐ3எஸ் (Idle Start-Stop System) நுட்பத்தினை பெற்றுள்ளது. மேலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி, பக்கவாட்டு ஸ்டேன்டு ட்யூப்லஸ் டயர்கள், பராமரிப்பு இல்லாத பேட்டரி, இன்டிகேட்டர், விஸ்கஸ் காற்று பில்டர்கள், 13.4 bhp பவரை வெளிப்படுத்தும் 150சிசி இன்ஜின் மற்றும் 5 வேக கியர்பாக்ஸையும் கொண்டுள்ளது. 70 மில்லியன் இருசக்கர வாகனங்கள் விற்பனையை கொண்டாடும் வகையிலும் 70 ஆவது இந்திய சுதந்திர தினத்தை சேர்த்து சிறப்பு அச்சீவர் எடிசன் மாடலை வெள்ளை நிறத்தில் இந்திய தேசிய கொடியை கலந்த பதித்து வெளியிட்டுள்ளது ஹீரோ மோட்டார் நிறுவனம்.

ஹீரோ நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள இன்ஜினை பெற்ற மாடலாக புதிய அச்சீவர் 150 பைக் உள்ளது. தற்போது இந்த பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.61,800 ஆக உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment