ஆரோக்கியமாக வாழ தமிழரின் பாரம்பரிய பானங்கள்!

பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் வருவதற்கு முன்னர் இயற்கையாக கிடைக்கும் பானங்களை மட்டுமே அருந்தி வந்தனர். அதனால் அவர்களுக்கு குடலியக்க பிரச்சனை, சர்க்கரை நோய் போன்றவை அதிக அளவில் இல்லை என்பது தான் உண்மை. இதற்கு முன்னர் குடிக்கப்பட்ட பாரம்பரிய பானங்களை இப்போது பார்க்கலாம்.

ஆரோக்கியமாக வாழ தமிழரின் பாரம்பரிய பானங்கள்:-

• பானற்கரம்:- சூடான நீரில் கொடம்புளி, நாட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுவது தான் பானற்கரம் இதை குடிப்பதால் உடல் சூடு, சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து பாதுகாக்கும்.
• பதநீர்:- இது பெரும்பாலும் கிராமப்புறங்களில் கோடைக் காலத்தில் சிறந்த பானமாக திகழ்கிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த பானம் இரும்பு, கால்சியம், போன்றவை அதிகமாக இருக்கிறது. உடல் சூட்டை குறைப்பதுடன், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது.
• இளநீர்:- உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கொலஸ்ட்ரால் என பல பிரச்சனைகளுக்கு நன்மை அளிக்கிறது. வெயில் காலத்தில் இதற்கு மவுசு அதிகம்.
• நன்னாரி சர்பத்:- நன்னாரியில் அதிக நன்மைகள் உள்ளன. இதை எலுமிச்சை சாறு, குளிர்ந்த நீர் சேர்த்து குடித்தால் உடல் சூடு, செரிமானம், அஜீரண கோளாறு, தலைவலி ஆகியவற்றை குணமாக்கும்.
• மோர்:- உடல் சூட்டை தணிக்கும், நீர் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். ஆனால், அதிக குளிர்காலங்களில் இதை தவிர்ப்பது நல்லது.
• காலையில் இஞ்சி சாறு, மதிய வேளையில் சுக்கு நீர், இரவு கடுக்கை பொடி நீர் என மூன்றையும் குடித்தால் அதற்கு பெயர் காயகல்பம் எனும் மருந்து முறை ஆகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், சூட்டை குறைக்கும்.
• சுக்கு, திப்பிலி, மிள்கு வேர், கொடிவேலி வேர் என அனைத்தை பொடியையும் கலந்து 250 மில்லி மோரில் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.