தலைமுடியை பராமரிக்க முறையாக செய்ய வேண்டியவை

முடியை பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே ஆசைதான். அது என்னவென்றால் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர வேண்டும் என்பது மட்டும் தான். ஆனால் அதை முறையாக எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் தலைமுடியில் இழப்பு (உதிர்வு, பொலிவு இழத்தல் போன்றவை) ஏற்படுகிறது. ஏற்படுகிறது. தலைமுடியை பராமரிக்க சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

தலைமுடியை எப்படி பராமரிக்கலாம்:-

  • பொதுவாக இந்த தவறை அனைவருமே செய்கின்றனர். தலைமுடியை சுத்தம் செய்வதற்கு கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ அல்லது சோப்பு போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால், அதற்கு பதிலாக சீயக்காய் அல்லது கெமிக்கல் கலக்காத ஷாம்பூ பயன்படுத்தலாம்.
  • தலைமுடி ஈரமாக இருக்கும் போது தலைசீவுவதன் மூலம் ஆரோக்கியமான முடி கூட உதிரும் வாய்ப்புள்ளது.
  • முடியை காய வைப்பதற்கு எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தாமல் மென்மையான துணியை பயன்படுத்தி முடியை காய வைக்கலாம்.
  • ஹேர் கலரிங், ஜெல், கிரீம் போன்ற கெமிக்கல் நிறைந்த பொருள்கள் உபயோகிப்பதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கும்.
  • நீளமான முடி இருந்தால் முடி உதிர்வு ஏற்படக்கூடும். எனவே சீராக வெட்டி முறையாக தலைமுடியை அலசி பராமரிக்க வேண்டும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.