நல்ல பழக்க வழக்கமே நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்!!

காலையில் சீக்கிரம் எழுவது:
இன்றைய சூழ்நிலையில் எவரும் காலை சீக்கிரம் எழுவதே இல்லை. நான்கு மணிக்கே எழுந்து பல் துலக்குவது உடலுக்கு நல்லது மற்றும் மூளையையும் சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும், உடல் எடையும் குறையும்.

தண்ணீர் அருந்துவது:

தண்ணீர் நம் வாழ்வில் மிக முக்கியமானது. தினம் அதிக அளவில் தண்ணீர் அருந்துவதால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள் குறைவதோடு தண்ணீரை கொண்டு முகத்தை ஒரு நாளைக்கு நான்கு முறை கழுவி வர முகம் நல்ல பொலிவை பெரும் சுருக்கங்கள் வராது.

இரவு தூக்கம்:

இன்றைய  நிலையில் அனைவரும் இரவு வேலைகளுக்கே செல்கிறார்கள் ஒழுங்கான தூக்கம் இன்றி. கண்டிப்பாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூக்கம் அவசியமே. தூங்காமல் இருந்தால் உடல் எப்பொழுதும் ஒரு வித சோர்வுடன் காண படும் மற்றும் கண்களுக்கு கேடு விளைவிக்கும்.

உணவு பழக்கம்:

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவுகளையே அதிகம் உட்கொள்ளுங்கள். கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து பழ ஜூஸ், இயற்கை தானிய வகைகள், பயறு வகைகள் என எடுத்து கொள்ளுங்கள்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.