9 ஜி.பி இலவசமாக வழங்கும் வோடபோன்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வருகைக்குப் பின் மற்ற நிறுவனங்கள் மார்கெட்டில் தங்களை தக்க வைத்துக்கொள்ள கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகளை வழங்கி வருகிறது. சில நிறுவனங்கள் தங்களது கால் சேவை கட்டணத்தினை குறைத்து வருகிறது மேலும் தங்களது டேட்டா சேவை கட்டணத்தினையும் குறைத்து வழங்கி வருகிறது.

தற்போது வோடபோன் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 9 ஜி.பி இலவசமாக பெற முடியும் இதற்காக வாடிக்கையாளர்கள் 1 ஜி.பிக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இதன் மூலம் மொத்தம் 10 ஜி.பி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த இலவச டேட்டா ஆஃபரை 4ஜி, 3ஜி வாடிக்கையாளர்கள் பெற முடியும். தமிழகத்தில் இந்த இலவச டேட்டா ஆஃபரை புதிய 4ஜி ஹேண்ட்செட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த 9 ஜி.பி இலவச டேட்டாவை இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.