எந்தெந்த கிழமைகளில் எதை செய்தால் வெற்றி பெறலாம் என தெரியுமா?

வீட்டில் செல்வம் பெருக மற்றும் கஷ்டங்கள் நீங்கி இன்பம் பெருகிட பல தாந்திரிக இரகசியங்கள் உள்ளன. அதை முறையாக கடைபிடித்தாலே போதுமானது. வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். இப்பொழுது எந்த கிழமைகளில் எதை செய்தால் நல்லது என பார்க்கலாம்.

  • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் ஒருவர் வெற்றிலை போடலாம், அல்லது அந்த பழக்கம் இல்லாதவர்கள் வெளியே செல்லும் போது ஒரு வெற்றிலையை எடுத்து தங்கள் சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்றால் செல்லும் காரியம் வெற்றியுடன் முடியும்.
  • திங்கள் கிழமை வெளியில் செல்லும் முன்னர் வீட்டின் நுழைவு வாயிலில் ஒரு நீள் வடிவமுள்ள கண்ணாடியை தொங்கவிட்டு அதில் முகத்தை பார்த்து விட்டு வெளியில் சென்றால் வெற்றி பெறலாம்.
  • செவ்வாய் கிழமை பொதுவாக அனுமனுக்கு பிடித்தமான நாளாக கூறப்படுகிறது. அதனால் செவ்வாய் கிழமை காலையில் எழுந்த்தும் அனுமன் மந்திரங்களை சொல்லி வேண்டி விட்டு சாப்பிடலாம். அது மட்டுமில்லாமல் முக்கியமான வேலையாக வெளியில் செல்லும் போது வாயில் சர்க்கரை அல்லது வெல்லத்தை சுவைத்து விட்டு சென்றால் காரியம் வெற்றி பெரும்.
  • புதன் கிழமைகளில் செய்யும் எந்த ஒரு முக்கியமான வேலையாக இருப்பினும் சிறிது புதினா அல்லது கொத்தமல்லி போன்றவற்றை சாப்பிட்டால் போதும். இப்படி செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
  • வியாழக்கிழமைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்னர் இரண்டு சீரகம் அல்லது கடுகை வாயில் போட்டு செல்லாம். இதை செய்வதன் மூலம் அந்த நாளில் செய்யும் காரியத்தில் எளிதில் வெற்றி பெறலாம்.
  • வெள்ளிக்கிழமை இந்துக்களுக்கு முக்கியமான ஆண்மிக நாளாக கருதப்படும். வெள்ளிக் கிழமைகளில் எந்த ஒரு முக்கிய பணியில் ஈடுபடும் முன்பும், தயிரை சிறிது சாப்பிடுவதால், அன்று நாம் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.
  • சனிக்கிழமைகளில் சிறிய இஞ்சி துண்டை நெய்யில் முக்கி எடுத்து சாப்பிடுவதன் மூலம் உங்களை தேடி அதிர்ஷ்டம் வரும் என்பது நம்பிக்கை. எனவே மேலே சொன்ன அனைத்தையும் தவறாமல் செய்து வாருங்கள் அதிர்ஷ்டத்தை உங்கள் பக்கம் வைத்து கொள்ளலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.