வெறும் வயிற்றில் முட்டைக் கோஸ் ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

முட்டைக் கோஸில் மற்ற காய்கறிகளை காட்டிலும் அதிக அளவிலான சத்துகள் அடங்கியுள்ளன. முக்கியமாக சொல்ல வேண்டுமெனில் புற்றுநோய் செல்களை தடுக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது. கல்லீரலை சுத்தம் செய்கிறது. பொதுவாக முட்டைக் கோஸ் சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் ஜூஸ் வடிவில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் முட்டைக் கோஸ் ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:-

  • குடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை சரி செய்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு காரணம் இதில் உள்ள லாக்டிக் அமிலம் தான்.
  • முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாச பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்கிறது. மூச்சுகுழாய் அழற்சி, ஆஸ்துமா போன்ற பிரச்சனையை சரி செய்யும்.
  • முட்டைக்கோஸில் சல்ஃபோரபேன் புற்றுநோய் ஏற்படுத்தும் செல்களின் தாக்கங்களை குறைக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தை சீராக்க உதவுகிறது.
  • வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடித்தால் வயிற்றில் அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழித்து அல்சரை விரைவில் குணமாக்கும்.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கி நோய்க்கிருமிகளின் தாக்கத்தை குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

 

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment