எலுமிச்சை பழத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

எலுமிச்சை பழம் மங்களகரமாக மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். இப்பழத்தை பூஜைக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். இதன் விலையும் குறைவு. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்கள் நிறைய உள்ளன. அனைவரும் இதனை உணவில் சேர்த்துக் கொண்டால் இதன் நன்மைகளை நாம் பெறலாம்.

எலுமிச்சை என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அதன் புளிப்புச் சுவை தான்.புளிப்புச்சுவை கொண்ட இந்த எலுமிச்சை ஜூஸில் அதிக மருத்துவகுணங்கள் இருக்கின்றன.எலுமிச்சை உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் பயன்படுவதில்லை இதனை சரும அழகை பாதுகாக்கவும் பயன்படுத்தலாம். இதன் நன்மைகளை கீழே காண்போம்!!!

குடலை சுத்தப்படுத்தும்:

      எலுமிச்சை சாற்றை 200மிலி தண்ணீரில் சேர்த்து, நிதமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடலை சுத்தம் செய்து குடலின் இயக்கத்தன்மையை அதிகரிக்கிறது. குடலிருந்து கழிவுகளை நீக்க உதவுகிறது.

புற்றுநோய்:

எலுமிச்சைக்கு லிமொனின் உட்பட 26 வகை புற்றுநோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் உள்ளது.புற்றுநோய் கட்டிகள் வராமல் தடுக்க இதில் இருக்கும் எண்ணெய் உதவுகிறது. புற்று கட்டியில் இருக்கும் அணுக்கள் கூடாமல் தடுக்க எலுமிச்சையில் உள்ள ஃப்ளேவோனாஸ் க்ளைகோசைட் உதவுகிறது.

காய்ச்சல்:

      எலுமிச்சை பழத்தில் ஃப்ளேவோனாய்டு மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைய இருக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது. ஜலதோஷம் மற்றும் காய்ச்சலை தடுக்க எலுமிச்சை பழத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கல்லீரல் பிரச்சனைகள்:

      எலுமிச்சை சாற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்த்து, நிதமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்:

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நார்ச்சத்து, மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் ஆகியவை ஆகும்.

அலர்ஜி:

உடலில் உண்டாகும் அலர்ஜியை தடுக்க எலுமிச்சையில் இருக்கும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

மூளை மற்றும் நரம்பு மண்டல சீர்குலைவுகள்:

      மூளை கோளாறுகளான டாங்கரெட்டின் பார்கின்சன் நோயை குணப்படுத்த எலுமிச்சையின் தோல் பகுதியில் இருக்கும் பைட்டோ நியூட்ரியன்ட்டு உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.

பார்வை குறைபாடு:

      நீரிழிவால் உண்டாகும் விழித்திரை நோயை சரிசெய்ய எலுமிச்சையில் உள்ள ருட்டின் பயன்படுகிறது.நீரிழிவு நோயையும் குணப்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள்:

பித்தப்பை கற்கள்,மற்றும் சிறுநீரக கற்களை கரைக்க எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் உதவுகிறது.

முதுமையை தடுக்கும்:

      முதுமையை உண்டாக்கும் அணுக்களை சரிசெய்து  வெகு காலம் இளமையுடன் இருப்பதற்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.