எள் சாப்பிட்டால் உடல் பருமனை அதிகரிக்கலாம்

“இளைத்தவர்களுக்கு எள்ளு கொளுத்தவர்களுக்கு கொள்ளு” என் அந்த காலத்திலே கூறியுள்ளார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா. உடல் ஒல்லியாக இருப்பவர்கள் எள்ளை சாப்பிட்டால் உடல் பருமனை அதிகரிக்கலாம் மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை சாப்பிட்டால் உடல் பருமனை குறைக்க முடியும் என்பதே ஆகும்.

எள் அளவில் வேண்டுமானால் சிறிதாக இருக்கலாம், ஆனால் அதன் நன்மைகள் மிக அதிகம். எள் மூன்று வகைப்படும். அவை வெள்ளை எள், கருப்பு எள், சிவப்பு எள். இவற்றின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

எள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

  • எள்ளில் மக்னீசீயம் சத்து அதிகமாக இருப்பதால் அதை சாப்பிடுவதால் சர்க்கரை நோயை தடுக்கலாம். உயர் இரத்த அழுத்ததை குறைக்கலாம்.
  • ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கருப்பு எள் தான் மிகவும் சிறந்தது. வெளி நாடுகளில் எள்ளை பிரட் மற்றும் சில உணவுகளில் தூவி சாப்பிடுகிறார்கள். நம் நாட்டில் அதை உணவாக உட்கொள்கிறோம்.
  • பெண்கள் இதை சாப்பிடுவதன் மூலம் கர்ப்பப்பையை பலப்படுத்தலாம்.
  • எள்ளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நல்லெண்ணெய் உடம்புக்கு குளிச்சியை தரக்கூடியது.
  • இதயம் மற்றும் கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் கெட்ட கொழுப்பையும் கரைக்கிறது.
  • இதில் உள்ள கால்சியம் வயதானவர்களுக்கு வரும் மூட்டு வலியை வராமல் தடுக்கலாம்.
  • உடல் மெலிந்து போய் காணப்படுபவர்கள் எள் சாப்பிடுவதால் குண்டாகலாம்.
  • மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்வை அளிக்கிறது.

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் எள்ளை பித்த உடல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. இது எளிதில் ஜீரணம் ஆவதில்லை.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.