எள்ளை ஊற வைத்த நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

கடைகளில் செயற்கையாக தயாரிக்கப்பட்டு பாட்டில்களில் விற்கப்படும் குளிர்பானங்களை குடிப்பதை விட வீட்டிலேயே செயற்கையாக தயாரித்து கிடைக்கும் நீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

செய்முறை:-

ஒரு கப் எள்ளை எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதை மூன்று கப் நீரினை ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி செய்வதன் மூலம் எள்ளில் உள்ள மொத்த சத்துகளும் நீரில் சேர்ந்து விடும். எள்ளை ஊற வைத்த நீரில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5 மற்றும் சி சத்துகள் அடங்கி உள்ளன. இதை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

நன்மைகள்:-

  • அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை அளிக்கும்.
  • இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் இதை தொடர்ந்து குடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • கல்லீரல், கணையம் மற்றும் எலும்புகளின் வலுவை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • செரிமான கோளாறுகளை சரி செய்து செரிமானத்தை அதிகரிக்கும்.

ஊற வைத்து கிடைக்கும் நீரை நான்கு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.