மது அருந்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

மது அருந்துவது இப்போது ஒரு கௌரவ பிரச்சனையாகவே மாறிவிட்டது. வயதானவர்கள் மட்டுமில்லாமல் இளைஞர்கள் கூட இப்போது அதிகமாக மது அருந்த ஆரம்பித்து விட்டனர். இதில் ஒரு சிலர் நான் கம்மியாக தான் குடிக்கிறேன். அதனால் எனக்கு எந்த பிரச்சனையும் வராது என்றும் கூறுவார்கள். ஆனால் மது அருந்தினாலே சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவற்றில் கல்லீரல் பாதிப்பு, புற்று நோய் போன்றவை முக்கியமானதாகும். மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இப்போது பார்க்கலாம்.

  • விஸ்கி, பிராந்தி, ஒயின், பியர் என அனைத்து மது சார்ந்தவற்றை குடிப்பதால் புற்று நோய் ஏற்படுகிறது. இதற்கு காரணம் உடலில் உள்ள புரோட்டீனை சிதைப்பதுதான் இதற்கு காரணம்.
  • தொடர்ச்சியாக மது அருந்தினால் தொண்டை, வாய், குடல், கல்லீரல், குரல் வளை, மற்றும் மார்பகம் போன்றவற்றில் புற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
  • தினமும் 2 முறை மது அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.