கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிடலாமா?

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் கோடைகாலங்களில் இதை சாப்பிடுவதின் மூலம் நம் உடலுக்கு நீர்ச்சத்து அதிகரிக்கும். இதை இரு துண்டுகளாக நறுக்கி கண்களில் வைப்பதால் கண்களுக்கு குளிர்ச்சியை தர கூடியது.

குறைந்த கொழுப்பு சத்தை கொண்ட வெள்ளரிக்காய் உடல் எடையை குறைக்கும், செரிமான சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும்.

வயிற்றில் ஏற்படும் கிருமிகள் மற்றும் புண் அனைத்தையும் அழிக்கும் சக்தி வெள்ளரிக்கு உண்டு, அதேபோல் சிறுநீரக பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

முகத்தில் வெள்ளரி பயன்படுத்துபவர்கள் நல்ல முக தோற்றத்தை கொண்டவர்களே, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் வாய்ப்பும் உள்ளது.

சிலர் வெள்ளரி விதைகளை சாப்பிடுவது இல்லை, அப்படி செய்யாமல் விதைகளையும் சேர்த்து கொள்ளுங்கள். நமக்கு தேவையான ரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் திறன் கொண்டது.

நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றும்.

வெள்ளரியை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக உண்பதே நல்லது. பித்தத்திற்கும், தாகத்திற்கும் வெள்ளரிக்காய் மிகவும் பயன்பட கூடியது.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.