ஈக்கள் தொல்லை குறைய எளிய வழி

நான் ஈ படத்தில் வருவதுபோல் ஈக்கள் நம்மை கொல்ல வரவிட்டாலும், வீட்டில் நம்மையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் எரிச்சல் படுத்துவதில் இவற்றிற்கு அப்படியொரு ஆனந்தம். முக்கியமாக வீட்டில் எதாவது குளிர் பானங்கள் அல்லது இனிப்பு சார்ந்த பானங்கள் எதாவது விழுந்து கிடந்தால் இவற்றின் மொய்க்கும் தன்மை வீட்டினை பார்ப்பதற்கு எரிச்சல் உண்டாக்கும்.

இவற்றினைக் கூட எளிதாக சுத்தம் செய்து அவற்றினை விரட்டிவிடலாம். ஆனால் கைக்குழந்தைகள் தூங்கும்போது இந்த ஈக்கள் செய்யும் தொந்தரவினால் அவதி குழந்தைகளுக்கு ஏற்படும். இதனை சரிசெய்ய குழந்தையின் படுக்கையினைச் சுற்றி ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைக் கசக்கி போட்டால் அந்த மணத்தினால் எதிர்க்கப்பட்டு அவை குழந்தைகள் அருகினில் வராது.

வீட்டினை தூய்மையாக வைத்திருப்பது, தேவையற்ற பொருட்களை சரியாக குப்பைத் தொட்டியில் போடுவது போன்ற பிற சின்ன சின்ன நல்ல பழக்கவழக்கங்கள் மூலமும் அவற்றின் தொல்லையினை வீட்டில் குறைக்க முடியும். வெறும் புதினா இலைகளைக் கொண்டு ஈக்களை விரட்டுவது எளிய விஷயம்தானே… அடுத்த முறை குழந்தைகள் ஈத்தொல்லையில் இருப்பதைப் பார்த்தால் இதைச் செய்து பாருங்கள்…

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.