மஞ்சள் தூள், துளசி பானம்

ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்க வேண்டும். இந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் மேலும் உடல் உபாதைகள் நீங்கும்.

குறிப்பாக சளி தொல்லைகள் இருப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால் நீரில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரல் அழற்சி மற்றும் சளி தாக்கத்தினை குறைத்து சளி பிடிப்பதை தடுக்கும். ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த நீரினை குடித்து வந்தால் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

இந்த நீரினை தினமும் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகமாகிறது இதனால் மன அழுத்தம் குறைகிறது. மேலும் இந்த நீர் குடல் இயக்கதினை மேம்படுத்தி குடல் நோய்கள் வராமலும், மலசிக்கலையும் தீர்க்கிறது. மேலும் இந்த நீரில் உள்ள மருத்துவ குணங்கள் அல்சர், அசிடிட்டி பிரசனைகளை தீர்க்க வல்ல சிறந்த மருந்தாக இந்த நீர் உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.