கார் ஓட்டும் போது இதையெல்லாம் செய்யக் கூடாது!!

கார் ஓட்டும் போது எதார்த்தமாக நாம் செய்யும் தவறு ஆபத்தில் சென்று முடிவடைகிறது. நாம் செய்யும் சில தவறுகளை இப்போது பார்க்கலாம்.

தவறுகள்:

• இண்டிகேட்டர்:- சாலையில் திரும்பும் போது திசை காட்டி விளக்கை போடாமல் சென்றால் பின்னால் வரும் வாகனங்கள் நம் மீது மோதும் அபாயம் உள்ளது.
• தூரத்து முகப்பு விளக்கை போடுவதன் மூலம் எதிரில் வருபவர்கள் கண் கூச வாய்ப்பு உள்ளது, இதனால் விபத்து ஏற்படலாம்.
• இருக்கையை சாய்வாக மாற்றுவதன் மூலம் தூக்கம் வர வாய்ப்பு உள்ளது.
• டிராபிக் சிக்னலில் மஞ்ச்ள் விளக்கு போடும் போது முந்தி அடித்து கொண்டு செல்வதன் மூலம் விபத்து ஏற்படுகிறது.
• அவசரமாக ஒரு திருப்பத்தில் திருப்புவதன் மூலம் பெரியதாக விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
• காரில் செல்லும் போது மிக மெதுவாகவும் செல்ல கூடாது, அதி வேகமாகவும் செல்ல கூடாது. இதனால் விபத்து ஏற்படலாம்.
• நாம் அவசரமாக பிரேக் பிடிப்பதன் மூலம் பின்னால் வரும் வாகனம் நம் மீது மோத வாய்ப்புண்டு.
• செல்போன் பேசுவது மற்றும் மெசெஜ் படிப்பது போன்றவற்றால் ஆபத்து ஏற்படுகிறது.
• சைடு கண்ணாடி, ரிவர்ஸ் கண்ணாடி பார்த்து வாகனம் இய்க்குவதால் விபத்து குறையும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment