உங்களுக்கு தெரியுமா பூசணிக்காயை கொண்டு சருமத்தை அழகு படுத்தலாம் என்று!

பூசணிக்காய் சமைத்து சாப்பிட்டு இருப்போம், ஆனால் முகத்திற்கு பயன்படுமா என்ற சந்தேகம் வரும் அனைவருக்கும், ஆமாங்க பூசணிக்காயில் இருக்கும் வைட்டமின்கள் நம் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி அழகான பொலிவை கொடுக்கிறது. அதை பார்க்கலாமா!

பூசணிக்காய் அழகை கொடுக்கும் !

வெயில் காலங்களில் ஏற்படும் உங்கள் முக வறட்சிக்கு பூசணிக்காயின் சதை பற்றினை எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து கொஞ்சம் திரவ நிலைக்கு கொண்டு வந்து முகத்திற்கு பயன்படுத்த, குளிர்ச்சியை கொடுத்து வெப்பத்தினால் ஏற்பட்ட கருமை நிறத்தையும் போக்கும் மற்றும் வறட்சியால் உண்டான முக அழகை திருப்பி கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

பூசணியில் இருக்கும் வைட்டமின்கள் :

  • வைட்டமின் சி
    வைட்டமின் ஏ
    வைட்டமின் ஈ

மேற்கூறியவை அனைத்தும் நம் சரும பாதுகாப்பில் மிகவும் உறுதுணையாக விளங்க கூடியது.

பூசணி சதை பற்றுடன் எலும்பிச்சை, தேங்காய் எண்ணெய், வேப்பிலை சாறும் கலந்து சருமத்திற்கு பயன்படுத்த கருமை திட்டுகள் மறைந்து அதனால் ஏற்பட்ட கரும் புள்ளிகளும் மறையும், பழைய செல்களை அகற்றி புதிய தோற்றத்தை கொடுத்து அழகை மெருகூட்டும்.

சிலருக்கு எண்ணெய் சருமத்தில் முக அழகு கெடும் மற்றும் முகம் எப்பொழுதும் ஒரு வித சோர்வுடன் காண படும். இதனை போக்க பூசணியின் சதை பற்றுடன் எலும்பிச்சை சாறு மற்றும் தேனை கலந்து உபயோகிக்கலாம். இதனால் முகத்தில் பருக்கள், வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் வராது.

பூசணியின் விழுதுகளில் இருக்கும் என்சைம் நமது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கி சருமத்தை வெண்மை நிறைமாக மாற்றி பிரகாசமான பொலிவுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

இவைகளை அடிக்கடி உபயோகிக்க வேண்டும் என்று இல்லை, சருமத்தில் ஏதேனும் குறைபாடு ஏற்படும் பொழுது தான் உபயோகிக்க நல்ல பலனை கொடுக்கும். தினம் பயன்படுத்த வேண்டாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.