வெங்காயச் சாறை பயன்படுத்தி பொடுகை நீக்கும் முறை!

சிறியவராக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி தலைமுடியை முறையாக பராமரிக்காமல் விட்டால் பொடுகு பிரச்சனை ஏற்படும். மேலும் இது வெள்ளை நிற செதில் போன்று நம் ஆடையின் மேலே விழுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை நிலவுகிறது. இதை சரி செய்ய அதிக விலையுள்ள ஷாம்பு தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வீட்டில் உள்ள வெங்காயத்தின் சாறை பயன்படுத்தியே சரி செய்யலாம். அதை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

வெங்காயச் சாறை பயன்படுத்தி பொடுகை நீக்கும் முறை:-

  • வெந்தயத்தை சிறிதளவு ஊற வைத்து பின்னர் மெதுவாக அரைத்து அதனுடன் வெங்காய சாறை சேர்த்து தலைமுடியின் அடிவரையிலும் தடவி சிறிது நேரம் கழித்து தலைக்கு சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை முற்றிலுமாக குறையும்.
  • கற்றாழைச் சாறுடன் வெங்காய சாறை கலந்து தலைமுடியில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
  • பச்சை பயிரை அரைத்து பொடியாக்கி அதனுடன் வெங்காயச் சாறை கலந்து தலைக்கு தடவி காய்ந்ததும் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • புடலங்காயின் சாறுடன் வெங்காயச் சாறை கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனை நீங்கும்.
  • வெங்காயச் சாறுடன் எலுமிடச்சை சாறை சேர்த்து தலைமுடியில் தடவி கழுவினால் தலைமுடியில் ஏற்படும் அரிப்பு, பொடுகு மற்றும் எரிச்சல் பிரச்சனையை சரி செய்யும்.

 

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.