பொடுகை விரட்ட உதவும் கிராமத்து வைத்தியங்கள்!

பொடுகு தொல்லை ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தாலோ அல்லது அதிகமாக வறட்சி ஏற்பட்டாலோ அல்லது கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை அதிகம் பயன்படுத்தினாலோ பொடுகு ஏற்படக் கூடும். பொடுகை விரட்ட உதவும் கிராமத்து வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

  • விளக்கெண்ணெயை பயன்படுத்தி தலைமுடியி மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து பொடுகு குறையும். மேலும் இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு தன்மை பொடுகை முற்றிலுமாக விரட்டும்.
  • தயிருடன் எலுமிச்சை சாறை கலந்து தலை முடிக்கு தடவுவதன் மூலம் முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை குறைத்து தலைமுடியை மிருதுவாக மாற்றும்.
  • வேப்பிலையை நீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை ஷாம்பு பயன்படுத்தி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும். இதற்கு காரணம் இதில் உள்ள பூஞ்சை எதிர்க்கும் தன்மை தான்.
  • பேக்கிங் சோடாவை நீரில் கலந்து தலைமுடியில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் முடியை அலசினால் பொடுகு குறையும்.
  • கற்றாழையின் ஜெல்லை தலைமுடியில் தடவி 30 நிமிடம் கழித்து ஷாம்பு இல்லாமல் நீர் மட்டும் பயன்படுத்தி அலசினால் பொடுகு நீங்குவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும் மாறும்.
  • ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் 1 : 3 என்ற விகிதத்தில் கலந்து தலைமுடியை மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து முடியை அலசினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.