தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற என்ன காரணம்?

முட்டை ஆரோக்கியமான ஒரு உணவு பொருள் என நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், அதில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் இதர சத்துகள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு முட்டையை சாப்பிட்டால் அந்த நாளுக்கு தேவையான அனைத்து சத்துகளும் நமக்கு கிடைத்துவிடும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மேலும் சில பயன்களை இப்போது பார்க்கலாம்.

தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என கூற காரணம்:-

  • முட்டையில் வைட்டமின் – ஏ, பி12, பி2, பி5, செலினியம், இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம், புரோட்டீன், நல்ல் கொழுப்பு போன்றவை அடங்கியுள்ளன.
  • முட்டையில் உள்ள நல்ல கொழுப்பு சத்தானது உடலில் மற்றும் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்திற்கு காரணமாகிறது. இதனால் இதய நோய்கள் வராமல் பார்த்து கொள்ள முடியும்.
  • மூளை வளர்ச்சிக்கு தேவையான கோலைன், மற்றும் வைட்டமின் – பி காம்ப்ளக்ஸ் போன்றவை உள்ளன. மேலும் முட்டையில் 12 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
  • தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடிவதோடு கண்புரை நோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

முட்டையை பச்சையாகவோ அல்லது எண்ணெயில் போட்டு சூடாக்கியோ சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிட்டால் அதன் சத்து இரண்டு மடங்கு அதிகரித்து நமக்கு கிடைக்கும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.