கறிவேப்பிலை மூலம் புற்று நோயை தடுக்கலாம் என தெரியுமா?

பொதுவாக நாம் அனைவரும் சாப்பாட்டில் கறிவேப்பிலை இருந்தால் அதை எடுத்து ஒரமாக போடுவது தான் வழக்கம். ஆனால் அதில் எவ்வளவு மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது தெரியுமா? அதை இப்போது பார்க்கலாம்.

மருத்துவ குணங்கள்:-

 புற்றுநோயை ஆரம்பத்திலே அழிக்கும் ஆற்றல் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
 இது சிறந்த ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு இருதய நோயினை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
 கறிவேப்பிலையை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வர உடலில் உள்ள சூடு நீங்கும். பரம்பரையாக வரும் முடி நரைத்தலை தடுக்கலாம்.
 கண் பார்வை குறைவு ஏற்படாது.
 கறிவேப்பிலையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இருதயம், நுரையீரல், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
 கடுகு மற்றும் கறிவேப்பிலை கலந்த கலவை நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது.
 தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.
 இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க இது பயன்படுகிறது.
 குரலை இனிமையாக்கவும், ஞாபக சக்தியை பெருக்கவும் கறிவேப்பிலை பயன்படுகிறது.
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் இனிமேலாவது சாப்பிட்டு மேற்கண்ட நோய் வராமல் காப்போம்.

மேலும் பல பயனுள்ள தகவல்களைப் பெற Subscribe செய்யுங்க!
  • Add Your Comment