இருமலை விரட்ட சில எளிய வழிகள்

பருவநிலை மாறும் போதோ அல்லது தண்ணீர் மாற்றம் காரணமாகவோ சளி மற்றும் இருமல் ஏற்படுகிறது. இருமலை எளிதாக குணமாக்க சில வழிகளை இப்போது பார்க்கலாம்.

இருமலை குணமாக்க வழிகள்:-

  • நாய் துளசி சாப்பிடுவதன் மூலம் இருமல் மற்றும் சளியை குணமாக்கலாம்.  நுரையீரலில் உள்ள சளியை வெளித்தள்ளுகிறது.
  • ஆடா தொடை, மிளகு போன்றவற்றை அரைத்து தொண்டையில் தடவுவதன் மூலம் இருமலின் காரணமாக ஏற்படும் தொண்டை வலியை குணமாக்கலாம்.
  • நாய் துளசி, மிளகு, தேன் மூன்றையும் நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் நீரை குடிப்பதன் மூலம் வறட்டு இருமலைக் கூட போக்கலாம்.
  • மிளகு, திப்பிலி, ஓமம், கடுக்காய் எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க வைத்து கிடைக்கும் நீரை குடித்தால் வறட்டு இருமல் மற்றும் சளியை போக்கலாம்.
  • பொதுவாக இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பீர்க்கங்காய், புடலங்காய், பூசணி போன்ற காய்கறிகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
  • ஆடாதொடை இலை, கண்டங்கத்தி வேர், தேன், திப்பிலி சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.