சந்திர கிரகணம் காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை!

சந்திர கிரகணம் ஹேவிளம்பி வருடம் தை 18,  31/1/2018 புதன்கிழமை மாலை 5.58 மணிக்கு கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழ இருக்கிறது. கன்னி லக்கினத்தில் கடகம் ராசியில் ஆயில்யம் ஒன்றாம் பாதத்தில் தொடங்க இருக்கிறது. சந்திர கிரகணம் முடியும் நேரம் இரவு ஒன்பது மணியாகும். முடிந்த பிறகு கோவில்களில் சுத்தம் செய்து, பூஜை செய்வார்கள். பூசம், புனர்பூசம், ஆயில்யம், விசாகம், கேட்டை, புரட்டாதி, அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திர கிரகண நேரத்தில் பரிகாரம் செய்து சாந்தி செய்து கொள்ளலாம்.

சந்திர கிரகணத்தில் செய்ய கூடியவை:

சந்திர கிரகணம் நேரத்தில் மந்திரம் சொல்லலாம். மந்திரம், ஜபம் செய்ய இயலாதவர்கள் ஒலிமூலமாக கேட்கலாம். இந்த நேரத்தில் மந்திரம் ஜெபத்தில் இரட்டிப்பு பலன்கள் ஏற்படும். உதாரணத்திற்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் அதற்கான ஸ்லோகம், மந்திரம் சொல்லி கொண்டு இருக்கலாம். நல்ல வேலை, தொழில் விருத்தி வேண்டுபவர்கள் அதற்கான ஸ்லோகங்கள் சொல்லலாம். மாணவர்கள் படிப்பு சம்மந்தமாக ஸ்லோகங்கள் சொல்லி கொண்டு இருக்கலாம்.

சந்திர கிரகணத்தில் தவிர்க்க வேண்டியவை:

இந்த கிரகண நேரத்தில் உணவு செரிமானம் ஆகாது என்பதால் உணவு எடுப்பதை தவிர்த்திடலாம். அதற்கு பதிலாக நீர் ஆகாரம் பருகலாம். சந்திர கிரகணம் தொடங்கும் முன் உணவை எடுத்து கொள்ளலாம். சமைத்து வைத்த உணவு எதுவும் இல்லாத மாதிரி பார்த்து கொள்ளுங்கள். சந்திர கிரகண நேரத்தில் கர்ப்பணி பெண்கள் வெளியே செல்ல கூடாது. சந்திர கிரகணம் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்து, பூஜை செய்து, புதியதாக உணவு சமைத்து கொள்ளலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment