அழகு சாதன பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

எல்லோருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்காகவே அவர்கள் வீட்டிலும் சரி, அழகு நிலையங்களிலும் சரி பலவிதமான கெமிக்கல் நிறைந்த பொருள்களை பயன்படுத்துவார்கள். இதை செய்வதால் சில நன்மைகள் கிடைத்தாலும் பயங்கரமான பின்விளைவுகளையும் தருகின்றன. அவற்றை இப்போது பார்க்கலாம்.

அழகு சாதன பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள்:-

  • ஐ – லைனர் பல நூற்றாண்டாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இவை கண்களுக்கு அழகான தோற்றத்தை கொடுக்கும். இதை கண்களில் பயன்படுத்தினால் எந்த வித பாதிப்பும் இல்லை என்றாலும் கண்களில் ஓரங்களில் போடும் போது கண்ணீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
  • குதிரை வால் எனப்படும் கூந்தல் பின்னலின் போது தலைமுடி மற்றும் தலையில் உள்ள திசுக்களின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு தலைமுடி உதிர்கிறது. மேலும் தலைவலி ஏற்படும் அபாயம் உள்ளது.
  • தலைமுடிக்கு உபயோகப்படுத்தக் கூடிய ஹேர் டை அலர்ஜியை ஏற்படுத்தி மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் கொப்பளங்கள் மற்றும் சருமத்தில் புண்கள் ஏற்படுகிறது.
  • ஹேர் ஸ்ட்ரெட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் கருவியால் தலைமுடி பாதிப்பு மற்றும் மேலும் சில தொந்தரவுகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு.
  • மஸ்காராவை பயன்படுத்தும் போது பாக்டீரியாக்கள் தேங்க கூடிய சூழ்நிலை உருவாகும். இவை உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் இதை மாற்ற வேண்டியது அவசியம்.
  • புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயணம் லிப்ஸ்டிக்கில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 60 சதவீதத்துக்கும் அதிகமான லிப்ஸ்டிக் தயாரிக்கும் கம்பெனிகளில் காரீயம் கலப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியவை.
  • மீன் பெடிக்யூர் முறையினால் தோல் அலர்ஜி, எய்ட்ஸ், ஹெபடைடீஸ் ஆகியவை இதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது. தோலில் வெட்டுக்காயம் அல்லது வேக்ஸிங் செய்தவர்கள் இதை செய்யாமல் இருந்தால் இந்த அபாயங்களிலிருந்து தப்பிக்கலாம்.
  • அழகு சாதன பொருள்களை பகிர்ந்து கொள்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதால் சளி, புண்கள் போன்றவற்றிற்கு காரணமான தொற்றுகள் பரவுகிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.