கேரட்டின் நன்மைகள் தெரியுமா ?

பெரும்பாலும் ஆங்கிலேய காய்யாக அறியப்படும் கேரட்டின் பூர்விகம் பெர்சியா தற்ப்பொழுது ஆப்கனிஸ்தான் என்றால் ஆச்சிரியமாக உள்ளது அல்லவா? அதே போல் மஞ்சள் முள்ளங்கி என்ற பெயரையும் கொண்ட இந்த கேரட்டின் நன்மைகளை அறிந்தால் மேலும் ஆச்சிரியம் கொள்வீர்கள். இதோ அதன் நன்மைகள் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

 

 • கேரட்டில் வைட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு நல்லது.
 • இதில் பீட்டா கரோடின் கண் புரை வளராமல் தடுக்கும் வல்லமை கொண்டது .
 • மாலை கண் நோய் வராமல் தடுக்கும் .
 • இதில் உள்ள நார் சத்து பொட்டாசியம் சத்துக்கள் ஜீரணத்திற்கு உதவும்.
 • கேரட்டை தினம் உண்ண உடலில் தேவையற்ற கொழுப்பு குறையும்.
 • இது ரதத்தை சுத்திகரித்து விருத்தி செய்யும் தன்மை கொண்டது.
 • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிர போக்கை கட்டுப்படுத்தும்.
 • கருவுற்ற பெண்களுக்கு வரும் மயக்கம் தலைச்சுற்றல் தடுக்கும் தன்மை கொண்டது.
 • கருவுற்ற பெண்கள் தினம் ஒரு கேரட் உண்ண குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் நிறமாகவும் பிறக்கும்.
 • குழந்தை பேறுக்கு பின் நல்ல தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க இது உதவும்.
 • கேரட்டை பால் திராட்சை பழம் தேனுடன் உண்ண உடல் நல்ல வலுப்பெறும்.
 • எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கேரட்டை உட்கொண்டால் பித்த கோளாறு நீங்கும்.

 

இவை மட்டும் அல்லாமல் கேரட்டை அளவாகவும் முறையாகவும் உட்கொள்ளும் பொழுது

 • ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
 • எலும்புகள் வலுப்பெறும்.
 • பற்கள் பலம் பெறும்.
 • புற்றுநோய் வராமல்.
 • தடுக்கும் முடி உதிர்வை குறைக்கும்.
 • வாய் துர்நாற்றம் போக்கும்.

மண்ணுக்கடியில் வளரும் இந்த கேரட் மறைத்து வைத்திருக்கும் நன்மைகளை பார்த்தால்   ஆச்சிரியமாக தானே உள்ளது. இயற்கை தந்த இந்த கொடையை தவறாமல் உணவில் சேர்த்து வளமாக வாழ்வோம்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.