வாகனம் நிறுத்துமிடம் அமைக்க உதவும் வாஸ்து முறை!

வாகனம் நிறுத்துமிடம் அமைக்க உதவும் வாஸ்து முறை:-

சிறிய வீடாக கட்டும் போது எந்த பிரச்சனையும் கிடையாது. பெரியதாக வீடு கட்டும் போது கார் பார்க்கிங்கிற்கு தனி இடம் ஒதுக்கும் போது வட மேற்கு அல்லது தென் கிழக்கு திசையில் தான் கட்ட வேண்டும். வீட்டின் வட கிழக்கில் மட்டும் கார் நிறுத்துமிடம் அமைக்க கூடாது. ஏனெனில் வாஸ்துப் படி அந்த திசையில் அதிகப்படியான பாரம் ஏற்றக் கூடாது.

வாகனம் நிறுத்துமிடத்தின் மேல் கூரை வீட்டின் கட்டிடத்தை தொட்டவாறு அமையக் கூடாது.  அது மட்டுமில்லாமல் வடக்கு மற்றும் தெற்கு சுற்று சுவரை அமைக்கக் கூடாது. வாகனம் எப்போதும் வடக்கு பார்த்தவாறே நிறுத்தி வைக்க வேண்டும். கதவானது உட்புறமாக திறக்கும் படி அமைய வேண்டும்.

வடக்கு முகமாக நிறுத்த முடியவில்லை என்றால் கிழக்கு பார்த்தவாறு வாகனங்களை நிறுத்தலாம். இதனால் வாகன்ங்கள் பழுதாகுவது தடுக்கப்படுகிறது. வாகனம் நிறுத்தும் இடத்தில் முறையாக வாஸ்துவை பராமரித்தால் வாகன விபத்துகள், பழுதுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.