பாகற்காயின் இலையை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!

பாகற்காய் சுவையில் வேண்டுமெனில் கசப்பாக இருக்கலாம். ஆனால் அதில் உள்ள நற்பண்புகள் அனைத்தும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. வாரத்திற்கு ஒரு நாள் பாகற்காயை உணவில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புழு மற்றும் பூச்சிகள் அழிக்கப்படுவதுடன் கொழுப்பு குறைகிறது. பாகற்காய் மற்றும் அதன் இலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பாகற்காயின் இலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

  • பாகற்காயின் இலையின் சாறை எடுத்து வறுத்து பொடியாக்கி சீரக தூள் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் விஷக் காய்ச்சல் குணமாகும்.
  • பாகற்காயின் இலையை அரைத்து உடல் முழுவதும் தடவி குளித்து வந்தால் நாய் கடியால் ஏற்பட்ட விஷம் உடல் முழுவதும் பரவாமல் இருக்கும்.
  • பாகற்காயின் இலை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் அந்த பிரச்சனையை சரி செய்யலாம்.
  • பாகற்காயின் இலையின் சாறுடன் பெருங்காய பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
  • பாகற்காயை வேக வைத்த நீரை குடிப்பதால் உடலில் உள்ள கிருமிகள் எல்லாம் அழிந்து விடும்.
  • பாகற் இலையின் சாறை உடல் முழுவதும் தடவி வந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  • பாகற்காயின் இலையினை நீரில் கொதிக்க வைத்து பின்னர் அதன் சாறு எடுத்து குடித்து வந்தால் இரைப்பை மற்றும் கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
  • பாகற்காயினை சூப் தயாரித்து அதில் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.