கடந்த ஆண்டின் மோட்டார் தர வரிசை பட்டியல்

இன்றைய காலத்து இளைஞர்கள் அனைவரும் மோட்டார் பைக் வைத்து இருப்பார்கள். ஆனால் இனி மேல் வாங்க வேண்டும் என சில  நபர்கள் நினைத்து இருக்கலாம். அப்படிபட்டவர்கள் எந்த வாகனம் வாங்குவது என்ற குழப்பத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த தர வரிசை உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன். அந்த தர வரிசை மற்றும் அதன் சிறப்பம்சத்தினை இப்போது பார்க்கலாம்.

 1. பஜாஜ் பிளாட்டினா:-

பஜாஜ் வாகங்களை பொறுத்தவரை மைலேஜிற்கு பஞ்சம் இல்லை. அதனால் இது நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

 1. இராயல் என்பீல்டு (புல்லட்):-

இந்த வாகனத்தில் செல்வது ஒரு கம்பீரமாக கருதப்படுகிறது. இது ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

 1. பஜாஜ் பல்சர் 150 சிசி:-

பல்சர் எட்டாவது இடத்தை பெற்று இருக்கிறது. சராசரியான மைலேஜ், சராசரியான விலை கொண்டு இருப்பது இதன் சிறப்பம்சம்.

 1. டிவிஎஸ் அப்பாச்சி:-

இளைஞர்கள் அனைவரும் பெருபாலும் இதை விரும்புவர். இதில் மற்ற வாகன்ங்களை விட லைட் வெளிச்சம் சிறப்பாக இருக்கும்.

 1. பஜாஜ் சிடி 100:-

இந்த வாகனம் நீண்டு உழைத்த காரணத்தால் பலரும் வைத்து இருந்தனர். இதனால் அதை மீண்டும் அப்கிரேடு செய்து மிகக் குறைவான விலையில் அந்த நிறுவனம் வெளியிட்டது.

 1. ஹோண்டா ஷைன்:-

சிறப்பான டிசைன், மற்றும் சொகுசு இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முதல் நான்கு இடங்கள்:-

முதல் நான்கு இடங்களையும் ஹீரோ நிறுவனம் பெற்று உள்ளது.

 • 1 —- ஹீரோ சூப்பர் ஸ்ப்லெண்டர்
 • 2——- ஹீரோ எச் எஃப் டீலக்ஸ்
 • 3 —— பேஷன் ப்ரோ
 • 4 ——- க்ளாமர்

ஆகிய நான்கும் இடம் பெற்று உள்ளது. இவை அனைத்தும் சிறந்த மைலேஜ் மற்றும் சிறந்த நம்பக தன்மை பெற்று உள்ளது. இதன் விலையும் சராசரி மக்கள் வாங்கும்படி அமைந்தது இன்னொரு சிறப்பு. இந்த தரவரிசை அனைத்தும் கடந்த ஆண்டு விற்பனையை பொறுத்து வரிசைப் படுத்தப்பட்டது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
 • Add Your Comment