பைக் செயினை பராமரிக்க சில வழிமுறைகள்

வீட்டில் சண்டை போட்டு பைக் வாங்கினால் மட்டும் போதுமா? பைக்கை மிகவும் சிறப்பான முறையில் இயக்க அதை முறையாக பராமரிக்க வேண்டும். டயரில் காற்று உள்ளதா என்று பார்த்தால் மட்டும் போதாது. முக்கியமாக செயினை பராமரிக்க வேண்டும்.

எஞ்சினில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலானது செயின் மூலமாக தான் வீலை சுற்ற வைக்கிறது.

வழிமுறைகள்:-

அதிகப்படியான புழுதிகள், தேய்மானம் போன்ற பாதிப்புக்கு இவை உள்ளாகிறது. முறையாக பராமரிக்காவிட்டால் அதன் செயின் அறுந்து பாதி வழியில் கூட நிற்க வாய்ப்பு இருக்கிறது. முறையான பராமரிப்பின் மூலம் செலவை குறைக்கலாம்.
செயினில் உள்ள அழுக்கை நீக்க பிரஸ் பயன்படுத்த வேண்டும். விரல்களை பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்ய டீசல், மண்ணணெய் பயன்படுத்துவதன் மூலம் நல்ல முடிவை பெறலாம்.
அதிகப்படியான செயின் ஆயிலை உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. போதுமான அளவினை இட்டால் போதுமானது.
பொதுவாக செண்டர் ஸ்டாண்ட் போட்டு வாகனத்தை நிறுத்தும் போது கியரை நியூட்டரல் செய்தல் மிக அவசியம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment